/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கடலாடி மார்க்கெட் பகுதியில் சேதமடைந்த ரோட்டில் ஆக்கிரமிப்பு அகற்ற கோரிக்கை

ADDED : ஏப் 05, 2025 05:53 AM
கடலாடி: - கடலாடி நகர் பகுதியில் பஸ் ஸ்டாண்ட் அருகே தேவர் சிலையில் இருந்து காமராஜர் சிலை வழியாக மெயின் பஜார் முத்தாலம்மன் கோயில் வரை ரோடு சேதம் அடைந்துள்ளதால் மக்கள் சிரமப்படுன்றனர்.
கடலாடி மெயின் பஜாரில் இருந்து செல்லக்கூடிய சாலையின் இரு புறங்களிலும் ஆக்கிரமிப்பு கடைகளால் கனரக வாகனங்கள் செல்வதில் பெரும் சிக்கல் ஏற்படுகிறது. ரோடுகளை ஆக்கிரமித்து கடைகள் பெருகி வருகின்றன.
பொதுமக்கள் கூறியதாவது: கடலாடி நகர் பகுதி வழியாக கடலாடி நீதிமன்றம், அரசு மேல்நிலைப்பள்ளி, ஐ.டி.ஐ., உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அலுவலகங்களுக்கு பிரதான சாலையாக செல்கின்றனர். இந்நிலையில் சேதமடைந்த சாலையால் முதியவர்கள் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர்.
கடலாடி வருவாய்த் துறையினர் மற்றும் போலீசார் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்பு இடங்களை அகற்றி குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும். கடலாடி யூனியன் நிர்வாகத்தினர் புதியதாக தார் ரோட்டை தரமாக அமைக்க வேண்டும் என்றனர்.