/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தேவிபட்டினத்தில் சாலையோரம் மழைநீர் வடிகால் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை

ADDED : நவ 18, 2025 03:55 AM

ராமநாதபுரம்: தேவிபட்டினம் சாலையில் இருபுறங்களிலும் மழைநீர் வடிகால் ஆக்கிரமிப்புகளால் மழைக்கு 200 ஏக்கரில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளது. ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.
காவிரி - வைகை -கிருதுமால் - குண்டாறு இணைப்பு கால்வாய் நீர்பாசன விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் மாவட்டச் செயலாளர் மலைச்சாமி தலைமையில் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் முகாமில் மனுகொடுக்கும் போராட்டம் நடந்தது.
அப்போது வாலாந்தரவை, வழுதுார், வடகாடு கிராமத்தில் விளைச்சல் நிலையத்தில் மத்திய அரசின் எண்ணெய், இயற்கை எரிவாயு குழாய்கள் அமைக்கும் பணிக்கு தடைவிதிக்க வேணடும்.
தேவிபட்டினம் சாலையில் இருபுறங்களிலும் மழைநீர் வடிகால் ஆக்கிமிப்பால், காந்திநகர், சக்கரவாக நல்லுார், கழனிக்குடி ஆகிய இடங்களில் தொடர் மழைக்கு 200 ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கிவிட்டது.
ஆக்கிரமிப்புகளை அகற்றி வடிகால் துார்வாரி சீரமைக்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.