/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அண்டக்குடியில் வசதிகள் கோரி ரேஷன் கார்டுகளுடன் மக்கள் போராட்டம்
/
அண்டக்குடியில் வசதிகள் கோரி ரேஷன் கார்டுகளுடன் மக்கள் போராட்டம்
அண்டக்குடியில் வசதிகள் கோரி ரேஷன் கார்டுகளுடன் மக்கள் போராட்டம்
அண்டக்குடியில் வசதிகள் கோரி ரேஷன் கார்டுகளுடன் மக்கள் போராட்டம்
ADDED : நவ 18, 2025 03:55 AM

ராமநாதபுரம்: பரமக்குடி தாலுகா எஸ். அண்டக்குடி கிராம மக்கள் சமுதாயக்கூடம், அடிப்படைவசதிகள் செய்து தராத அதிகாரிகளை கண்டித்து, ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் ஆதார், ரேஷன் கார்டுகளை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எஸ். அண்டக்குடி கிராம மக்கள் கூறியதாவது: எங்கள் கிராமத்திற்கு ஒதுக்கப்பட்ட சமுதாயக் கூடத்தை பொய்யான காரணம் கூறி வேறு கிராமத்திற்கு இடம் மாற்றியுள்ளனர்.
இதற்கு காரணமான அதிகாரிகள் மீது கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அண்டக்குடியில் ரோடு, தெருவிளக்கு உள்ளிட்ட போதுமான வசதிகள் இல்லாமல் மிகவும் சிரமப்படுகிறோம்.
தொகுதி எம்.எல்.ஏ.,விடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. எனவே ஆதார், ரேஷன் கார்டுகளை கலெக்டரிடம் ஒப்படைக்க உள்ளோம் என்றனர். அதன்பிறகு கலெக்டர் சிம்ரன்ஜீத் காலோனை சந்தித்து மனு அளித்தார்.
அவர் வேறுஇடத்தில் சமுதாய கூடம் கட்டும் பணிகுறித்து விசாரித்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார். இதில் சமாதானமடைந்த மக்கள் ஆதார், ரேஷன் கார்டுகளை ஒப்படைக்காமல் கிளம்பிச் சென்றனர்.