/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சிக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் அனுமதியின்றி பட்டாசு விற்பனை
/
சிக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் அனுமதியின்றி பட்டாசு விற்பனை
சிக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் அனுமதியின்றி பட்டாசு விற்பனை
சிக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் அனுமதியின்றி பட்டாசு விற்பனை
ADDED : நவ 18, 2025 03:54 AM
சிக்கல்: சிக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் அனுமதி இல்லாமல் பட்டாசு விற்பனை செய்வதால் முறையாக லைசன்ஸ் எடுத்து பட்டாசு விற்பனை செய்யும் வணிகர்கள் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.
தீபாவளி பண்டிகை மட்டுமில்லாது திருமணம், காதணி விழா, கோயில் விசேஷம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் பட்டாசு மற்றும் வான வேடிக்கைகள் வெடிக்கின்றனர்.
அரசின் அனுமதி பெற்று முறையாக லைசன்ஸ் வைத்திருக்கும் வணிகர்கள் சட்டவிரோதமாக அனுமதியின்றி பட்டாசு விற்பனையால் தொடர் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.
வணிகர்கள் கூறியதாவது: சிக்கல் நகர் பகுதிகளில் கோடவுன்களில் அரசின் எவ்வித அனுமதியும் பெறாமல் சட்டவிரோதமாக பட்டாசுகள் விற்பனை பல வருடங்களாக செய்து வருகின்றனர்.
இதனால் அரசுக்கு கிடைக்கக்கூடிய வருவாயில் இழப்பு ஏற்படுகிறது. பொதுவாக பட்டாசு விற்கக்கூடிய இடம் மற்றும் கோடவுன்களை சுற்றி பாதுகாப்பு உபகரணங்கள் வைத்திருக்க வேண்டும். தீயணைக்கக்கூடிய சிலிண்டர்கள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.
பல்வேறு பாதுகாப்பு நடைமுறைகள் இல்லாமல் சிக்கல் நகரில் விற்கக்கூடிய சட்ட விரோத பட்டாசு விற்பனையை தடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
கடலாடி தாசில்தார் பரமசிவன் கூறுகையில், அரசின் அனுமதியின்றி பட்டாசு விற்பனை செய்ய கூடாது.
மீறி உரிமம் பெறாமல் சட்டவிரோதமாக பட்டாசு விற்கும் கடைகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

