/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
உலக அழகி போட்டியில் விருது பெற்ற பெண்ணுக்கு வரவேற்பு
/
உலக அழகி போட்டியில் விருது பெற்ற பெண்ணுக்கு வரவேற்பு
உலக அழகி போட்டியில் விருது பெற்ற பெண்ணுக்கு வரவேற்பு
உலக அழகி போட்டியில் விருது பெற்ற பெண்ணுக்கு வரவேற்பு
ADDED : நவ 18, 2025 03:54 AM
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே தெற்குகாக்கூர் சேர்ந்த ஜோதிமலர் 28. இவர் புனேயில் நடந்த அழகிபோட்டியில் தேசிய அளவிலான மிஸ் டூரிசம் அம்பாசிடர் ஹெரிடேஜ் இந்தியா 2025 என்ற பட்டம் பெற்றார்.
தாய்லாந்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த மிஸ் ஹெரிடேஜ் 2025 உலக அழகி போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்று ஜோதிமலர் கலாசார துாதர் பட்டம் பெற்றுள்ளார்.
நேற்று சொந்த ஊரான முதுகுளத்துாருக்கு வந்த ஜோதிமலருக்கு அ.தி.மு.க.,வை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ., மலேசியா பாண்டியன், ஒன்றியச் செயலாளர் செந்தில்குமார் அன்பளிப்பு வழங்கினர். அவரது குடும்பத்தினர், பொதுமக்கள், அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து வரவேற்றனர்.