/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சவுதி அரேபியாவில் இறந்தவர் உடலை மீட்டுத்தர கோரிக்கை
/
சவுதி அரேபியாவில் இறந்தவர் உடலை மீட்டுத்தர கோரிக்கை
சவுதி அரேபியாவில் இறந்தவர் உடலை மீட்டுத்தர கோரிக்கை
சவுதி அரேபியாவில் இறந்தவர் உடலை மீட்டுத்தர கோரிக்கை
ADDED : மார் 22, 2025 05:38 AM

ராமநாதபுரம்: சவுதி அரேபியாவில் இறந்த டிரைவர் கோவிந்தசாமி உடலை மீட்டு தாயகம் கொண்டுவர அரசு உதவி செய்ய வேண்டும். என அவரது மனைவி தேசியராணி மற்றும் உறவினர்களுடன் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அதில் கூறியிருப்பதாவது: பரமக்குடி தாலுகா அக்கிரமேசியை சேர்ந்த கிருஷ்ணசாமி மகன் கோவிந்தசாமி 38. எங்களுக்கு திருமணமாகி 5 குழந்தைகள் உள்ளனர். குடும்ப சூழ்நிலை காரணமாக சவுதி அரேபியாவில் கனரக வாகன டிரைவராக கடந்த 2 ஆண்டுகளாக பணிபுரிந்தார்.
நேற்று முன்தினம் வாகனம் தீப்பிடித்து எரிந்ததில் கோவிந்தசாமி இறந்து விட்டதாக அலைபேசியில் தகவல் தெரிவித்தனர். எனவே அவரது உடலை தாயகம் கொண்டு வரவும், அவருக்கு கிடைக்க வேண்டிய பண பலன்களை பெற்றுத் தரவும் வேண்டும்.
அதற்கு மத்திய, மாநில அரசுகள் உதவி செய்ய வேண்டும் என கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோனிடம் மனு அளித்துள்ளார்.