/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
உத்தரகோசமங்கை கோயில் கும்பாபிஷேகத்திற்கு பரமக்குடியில் இருந்து பஸ்கள் இயக்க கோரிக்கை

ADDED : ஏப் 02, 2025 05:28 AM
பரமக்குடி : உத்திரகோசமங்கை சிவன் கோயில் கும்பாபிஷேகத்திற்கு பரமக்குடியில் இருந்து சிறப்பு பஸ்களை இயக்குவதற்கு பக்தர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பரமக்குடி அருகே சத்திரக்குடியை அடுத்து உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயில் உள்ளது. இங்கு மரகத நடராஜர் அருள்பாலிக்கிறார்.
ஆண்டிற்கு ஒருமுறை ஆருத்ரா தரிசனத்தின் போது நடராஜரின் திருமேனியிலிருந்து சந்தன காப்பு அகற்றப்படும்.
இந்நிலையில் ஏப்.,4ல் கும்பாபிஷேகம் நடக்க உள்ள நிலையில் தற்போது 3 நாட்கள் சந்தன காப்பு அகற்றப்பட்டு மரகத நடராஜர் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஆதி சிவன் கோயில் என்பதால் பல ஆயிரம் பக்தர்கள் தினமும் கும்பாபிஷேக நிகழ்வை காண வந்து செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மதுரையில் இருந்து பரமக்குடி பஸ் ஸ்டாண்டில் இறங்கி, உத்தரகோசமங்கை செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஆனால் குறிப்பிட்ட இரண்டு அல்லது மூன்று பஸ்கள் மட்டுமே பரமக்குடியில் இருந்து இயக்கப்படுகின்றன.
இதனால் பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி தொடர்ந்து கும்பாபிஷேக நிகழ்வு வரை மற்றும் மண்டல பூஜை காலங்களிலும் சிறப்பு பஸ்களை போக்குவரத்து துறை இயக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.