/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தார் ரோடு தரமாக அமைக்க கோரிக்கை
/
தார் ரோடு தரமாக அமைக்க கோரிக்கை
ADDED : ஜன 04, 2026 05:52 AM

திருப்புல்லாணி: திருப்புல்லாணி கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து கிழக்கு ரக வீதி மற்றும் சேதுக்கரை செல்லும் வரை சாலை அகலப்படுத்தப்பட்டு புதியதாக தார்ச்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
திருப்புல்லாணியின் நான்கு ரத வீதிகளிலும் பங்குனி மற்றும் சித்திரை மாதங்களில் நடக்கக் கூடிய தேர் திருவிழா காலங்களில் சாலையின் தரம் நன்றாக இருந்தால் மட்டுமே சேதம் அடையாமல் நீண்ட நாட்களுக்கு இருக்கும்.
அதிக எடை கொண்ட தேர் செல்வதற்கு ஏற்ற வகையில் சேதமடையாதவாறு தரமான தார் சாலை அமைக்க வேண்டும்.
இதே போல் சேதுக்கரை வரை செல்லக்கூடிய பகுதியிலும் பொதுமக்களின் நலன் கருதி தார் சாலையை தரமாக அமைக்க வேண்டும். ஆக்கிரமிப்புகளை தவிர்க்க அரசு இடங்களில் சாலை ஓரங்களில் அதிகளவு மரங்களை நட்டு பராமரிக்க வேண்டும் என தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

