/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
உத்தரகோசமங்கை ராஜகோபுரம் முன் மண்டபம் பகுதி வரை நிழற்பந்தல் இன்றி பக்தர்கள் அவதி வரும் ஆண்டுகளில் சரி செய்ய வேண்டும்

ADDED : ஜன 04, 2026 05:51 AM

உத்தரகோசமங்கை: ஜன. 4--: உத்தரகோசமங்கை மங்களநாதர் கோயில் ஆருத்ரா தரிசன விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு கோயில் ராஜகோபுரம் முன் மண்டபம் பகுதி வரை நிழற்பந்தல் அமைக்கப்படாததால் பக்தர்கள் வெயிலில் சிரமப்பட்டனர். வரும் ஆண்டுகளிலாவது இதை சரி செய்ய வேண்டும்.
ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு கடந்த ஜன.,1 முதல் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக வந்திருந்தனர்.
ராமநாதபுரம் மட்டுமின்றி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெளி மாநிலங்களில் இருந்தும் பல ஆயிரம் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். பக்தர்கள் கூறியதாவது:
உத்தரகோசமங்கை ராஜகோபுரத்தில் இருந்து பிரம்ம தீர்த்த அலங்கார மண்டபம் வரை தற்காலிக பச்சை நிற பந்தல் அமைக்க வேண்டும்.
திருவிழா காலங்களில் மட்டுமே தற்காலிக நிழற்பந்தல் அமைப்பது முக்கியத்துவம் வாய்ந்தது. கொளுத்தும் வெயிலில் நீண்ட வரிசையில் நிற்கும் போது ஏராளமானோர் வெயிலின் தாக்கத்தால் மயக்கமடைந்தனர்.
பெரும் சிரமத்தையும் பொருட்படுத்தாமல் சுவாமி தரிசனம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் வரிசையில் நின்று வருகின்றனர். தமிழக அரசு இறை சேவையாக ஹிந்து சமய அறநிலைத்துறையுடன் இணைந்து தற்காலிக பந்தல் அமைக்க வேண்டும். உண்டியல் உள்ளிட்ட வருமானங்களை மட்டுமே குறிக்கோளாக கொள்ளும் நிலைப்பாட்டை ஹிந்து சமய அறநிலையத்துறையினர் மாற்றிக்கொண்டு பக்தர்களுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்.
வரக்கூடிய விழாக் காலங்களில் இது போன்ற குறைகளை நிவர்த்தி செய்வதற்கு முன்வர வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் சிவனடியார்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும் என்றனர்.