/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடியில் எரிவாயு தகன மேடை அமைக்க கோரிக்கை
/
பரமக்குடியில் எரிவாயு தகன மேடை அமைக்க கோரிக்கை
ADDED : நவ 07, 2024 01:49 AM

பரமக்குடி: பரமக்குடி நகராட்சிக்குஉட்பட்ட எமனேஸ்வரம், ஜீவா நகர் பகுதியில் ரூ. 1.76 கோடி மதிப்பில் எல்.பி.ஜி., தகன மேடை கட்டப்பட்டு வரும் நிலையில் பரமக்குடி பகுதியில் புதிதாக அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பரமக்குடி நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். இங்கு பல்வேறு பகுதிகளில் மயானம் செயல்படுகிறது. தொடர்ந்து காக்கா தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் எந்தவித அடிப்படை வசதிகளும் இன்றி மயானம் இயங்குகிறது.
இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மஞ்சள்பட்டணம் பகுதியில் மின்மயானம் அமைக்கப்பட்டது. இந்த மயானம் அவ்வப்போது செயல்படாமல் இருந்த நிலையில் பழைய நிலையிலேயே இறுதி சடங்குகள் நடக்கும் நிலை ஏற்பட்டது.
இது குறித்து தினமலர் நாளிதழில் அவ்வப்போது செய்தி வெளியிட்டு வந்த நிலையில் சீரமைக்கப்பட்டு வந்தது. தற்போது எமனேஸ்வரம் ஜீவா நகர் பகுதியில் 1 கோடியே 76 லட்சம் ரூபாய் மதிப்பில் எல்.பி.ஜி., தகன மேடை கட்டப்பட்டு வருகிறது. இப்பகுதி முழுவதும் வேலி அமைக்கப்பட்டு பணிகள் நடக்கின்றன.
இங்கு இறுதி சடங்கிற்கு எந்த தடையும் இன்றி மயானம் இயங்க அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும். இந்நிலையில் வைகை ஆற்றின் மறு கரையில் உள்ள எமனேஸ்வரத்தில் 10 வார்டுகள் மட்டுமே இருக்கிறது.
ஆகவே பரமக்குடி பகுதியில் உள்ள 26 வார்டு மக்களின் சிரமத்தை கருதி புதிய மின் மயானம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.