UPDATED : அக் 09, 2026 03:57 PM
ADDED : அக் 09, 2026 03:54 PM
திருவாடானை: திருவாடானை அரசு கலைகல்லுாரியில் கீழக்கரை, ஏர்வாடி, மானாமதுரை உள்ளிட்ட பல ஊர்களிலிருந்து மாணவர்கள் படிக்கின்றனர். இப்பகுதி மாணவர்கள் நீண்ட துாரம் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால் மாணவர் விடுதியை விரைவில் திறக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவாடானையில் இயங்கி வந்த ஆதிதிராவிடர் பள்ளி மாணவர் விடுதியில் மாணவர் எண்ணிக்கை குறைந்ததால் அதனை கல்லுாரி மாணவர் விடுதியாக தரம் உயர்த்தி நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த விடுதி சமூக நீதி கல்லுாரி மாணவர் விடுதி என்ற பெயரில் அக்., முதல் துவங்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் 10 நாட்களாகியும் விடுதி இன்னும் திறக்கப்படவில்லை.
இக்கல்லுாரியில் கீழக்கரை, ஏர்வாடி, மானாமதுரை மற்றும் பல ஊர்களிலிருந்து ஏராளமான மாணவர்கள் படிக்கின்றனர். இவர்கள் நீண்ட துாரம் பயணம் செய்து கல்லுாரிக்கு வந்து செல்வதில் சிரமங்களை சந்திக்கின்றனர். வெளியூர்களிலிருந்து கல்லுாரிக்கு வரும் மாணவர்கள் தினமும் போதிய பஸ் வசதியில்லாததால் பல மணி நேரம் பயணம் செல்வதில் செலவிடுகிகன்றனர்.
இதனால் இவர்கள் படிப்பில் கவனம் செலுத்த முடிவதில்லை. நீண்ட துாரம் பயணிப்பதால் உடல் சோர்வு அடைகின்றனர். எனவே தரம் உயர்த்தப்பட்ட இக்கல்லுாரி மாணவர் விடுதியை தாமதமின்றி விரைவில் திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
