/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கழிப்பறை பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை
/
கழிப்பறை பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை
ADDED : பிப் 20, 2024 11:14 PM

ரெகுநாதபுரம் - ரெகுநாதபுரம் அருகே நயினாமரைக்கான் ஊராட்சியில் 8 கழிப்பறைகள் கொண்ட வளாகம் பயன்பாடின்றி பூட்டியுள்ளது.
இங்கு 2011ல் கட்டப்பட்ட மகளிர் சுகாதார வளாகம் எவ்வித பயன்பாடின்றி இருந்தது.
இந்நிலையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக 15வது நிதிக்குழு மானியத்தில் 2021-22ல் ரூ.2 லட்சம் ஒதுக்கப்பட்டு கழிப்பறை வளாகத்தில் பராமரிப்பு பணிகள் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டது.
புதியதாக மாறிய கழிப்பறை வளாகம் எவ்வித பயன்பாடும் இன்றி பூட்டியே வைக்கப்பட்டுள்ளது. நயினாமரைக்கான் பொதுமக்கள் கூறியதாவது:
திறந்தவெளியில் மலம் கழித்தலை தவிர்ப்பதற்காக அமைக்கப்பட்ட சுகாதார வளாகம் பூட்டியே உள்ளது.
குடிநீர் தொட்டியில் தண்ணீர் சப்ளை இல்லாமல் உள்ளது. எனவே உரிய முறையில் சுகாதார வளாகத்தை பயன்படுத்தி அரசு நிதி வீணடிப்பை தவிர்க்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

