ADDED : ஜன 17, 2024 12:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை : திருவாடானை அருகே கம்பெனிபுதுக்குடியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருக்கு சொந்தமான பசுமாடு வயல்காட்டிற்கு மேய்ச்சலுக்காக சென்ற போது கால்வாயில் சேற்றில் சிக்கியது.
திருவாடானை தீயணைப்புநிலைய அலுவலர் வீரபாண்டியன் தலைமையில் சென்ற வீரர்கள் மாட்டை கயிற்றால் கட்டி, நீண்ட நேர போராட்டத்திற்கு பின் பத்திரமாக மீட்டனர்.

