/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் கோபுரத்தில் சிக்கிய பருந்து மீட்பு
/
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் கோபுரத்தில் சிக்கிய பருந்து மீட்பு
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் கோபுரத்தில் சிக்கிய பருந்து மீட்பு
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் கோபுரத்தில் சிக்கிய பருந்து மீட்பு
ADDED : மார் 14, 2024 11:54 PM

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் கிழக்கு ராஜகோபுரம் இடி தாங்கியில் சிக்கிய பருந்தை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
ராமாயண வரலாற்றில் தொடர்புஉடைய ராமேஸ்வரம் கோயிலில் கிழக்கு ராஜகோபுரம் பிரசித்த பெற்றது. இக்கோபுரம் 17ம் நுாற்றாண்டில் 9 நிலைகளுடன் 126 அடி உயரத்தில் கட்டப்பட்டது.
இடி மின்னலில் இருந்து இக்கோபுரம் மற்றும் கோயில் கட்டடங்களை பாதுகாக்க கிழக்கு கோபுரம் உச்சியில் இடிதாங்கி உள்ளது.
இந்த இடிதாங்கி கம்பியில் ஒரு பருந்து சிக்கியது. அதிலிருந்து வெளியேற முடியாமல் ஒலி எழுப்பியது. இதனால் கோபுர உச்சியில் ஏராளமான பருந்துகள், காகங்களும் சுற்றிய வண்ணம் இருந்தன. இதனைக் கண்ட கோயில் ஊழியர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
கோபுர உச்சிக்குச் சென்ற தீயணைப்பு வீரர்கள் ஒருவர் கம்பியில் சிக்கிய பருந்தை மீட்டு பறக்க விட்டனர்.