/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
குண்டாறு வரத்து கால்வாய்கள் துார்வார கூட்டத்தில் தீர்மானம்
/
குண்டாறு வரத்து கால்வாய்கள் துார்வார கூட்டத்தில் தீர்மானம்
குண்டாறு வரத்து கால்வாய்கள் துார்வார கூட்டத்தில் தீர்மானம்
குண்டாறு வரத்து கால்வாய்கள் துார்வார கூட்டத்தில் தீர்மானம்
ADDED : நவ 07, 2024 01:51 AM
கமுதி: கமுதியில் மார்க்சிஸ்ட் கம்யூ., சார்பில் தாலுகா மாநாடு நடந்தது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிவாஜி தலைமை வகித்தார். நிர்வாகி முத்துராமன் வரவேற்றார். புதிய தாலுகா குழு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
இதில் முத்து விஜயன், கண்ணதாசன், ராமர், கனிராஜ், முனியசாமி, கணேசன், பொன்னுச்சாமி, கோவிந்தராஜன் நிர்வாகிகளாகவும் செயலாளராகஜீவானந்தம் தேர்வு செய்யப்பட்டார்.
பின்பு கமுதி அரசு மருத்துவமனையில் உரிய டாக்டர்கள் நியமிக்கப்பட வேண்டும். அடிப்படை சுகாதார வசதிகள் மேம்படுத்த வேண்டும்.
கமுதி குண்டாறு வரத்து கால்வாயில் சீமைக்கருவேல மரங்களை அகற்றி துார்வார வேண்டும். அபிராமம் கண்மாயில் ஆற்று தண்ணீர் வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். துாத்துக்குடியில் இருந்து கமுதி வழியாக புதிய ரயில் பாதை ஏற்படுத்த வேண்டும்.
அதானி நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்டுஉள்ள கண்மாய்கள், நீர்நிலைகளை அரசு கையகப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மாவட்ட செயலாளர் காசிநாத துரை நன்றி கூறினார்.