/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ரெகுநாதபுரம் ஊராட்சியில் புதிய வாரச்சந்தை அமைக்க தீர்மானம் 16 ஊராட்சி மக்கள் பயன்பெறுவர்
/
ரெகுநாதபுரம் ஊராட்சியில் புதிய வாரச்சந்தை அமைக்க தீர்மானம் 16 ஊராட்சி மக்கள் பயன்பெறுவர்
ரெகுநாதபுரம் ஊராட்சியில் புதிய வாரச்சந்தை அமைக்க தீர்மானம் 16 ஊராட்சி மக்கள் பயன்பெறுவர்
ரெகுநாதபுரம் ஊராட்சியில் புதிய வாரச்சந்தை அமைக்க தீர்மானம் 16 ஊராட்சி மக்கள் பயன்பெறுவர்
ADDED : ஜன 06, 2024 05:27 AM

ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரம் ஊராட்சியை சுற்றிலும் 16 கிராமங்கள் உள்ளன. இதில் 15 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர்.
ரெகுநாதபுரம் ஊராட்சியை சுற்றி கிராம மக்கள் பயன்பெறும் வகையில் அரசு மற்றும் தனியார் மேல்நிலைப் பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள் தமிழ்நாடு கிராம வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி, அரசு ஆரம்ப சுகாதார நிலையம், துணை சுகாதார நிலையம், நுாலகம், அஞ்சல் நிலையம், அரசு மாணவர் விடுதி, கால்நடை மருத்துவமனை, தனியார் மருத்துவமனை, மின்வாரிய அலுவலகம், மீன் மார்க்கெட் உள்ளிட்ட ஏராளமான கட்டமைப்பு வசதிகள் உள்ளது.
திருப்புல்லாணி முதல் பிரப்பன் வலசை மற்றும் ராமநாதபுரம் முதல் பெரியபட்டினம் வரை தேசிய நெடுஞ்சாலைகளின் முக்கிய சந்திப்பாக ரெகுநாதபுரம் ஊராட்சி அமைந்துள்ளது. ரெகுநாதபுரத்தில் இருந்து 16 கி.மீ.,ல் உள்ள ராமநாதபுரம் புதன் கிழமை வாரச்சந்தைக்கு இப்பகுதியில் உள்ள ஏராளமான மக்கள் சென்று வருகின்றனர்.
ரெகுநாதபுரம் ஊராட்சி தலைவர் கோபாலகிருஷ்ணன் கூறியதாவது:
திருப்புல்லாணி, மண்டபம் யூனியனுக்கு உட்பட்ட 150 க்கும் மேற்பட்ட கிராமங்கள் இப்பகுதியில் உள்ளன. பொதுமக்களின் அடிப்படை மற்றும் அத்தியாவசிய தேவைக்காக ரெகுநாதபுரம் ஊராட்சியில் வாரச்சந்தை அமைப்பதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பான வி.ஏ.ஓ., அடங்கல் சான்று வழங்கப்பட்டுள்ளது.இது குறித்து ஊராட்சி சார்பில் கலெக்டரிடம் கோரிக்கை மனு மற்றும் தீர்மான நகல் அளித்துள்ளேன் என்றார்.
துணைத் தலைவர் ஜெகத்ரட்சகன், ஒன்றிய கவுன்சிலர் நாகநாதன் உட்பட வார்டு உறுப்பினர்கள் உடனிருந்தனர்.