நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கமுதி: -கமுதி அருகே பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்திற்கு அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின்தேசிய தலைவர் நரேன் சட்டர்ஜி நேற்று வந்தார். முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
தேவர் வாழ்ந்த இல்லம், வழங்கப்பட்ட பழமையான பாராட்டு பட்டயங்கள், புகைப்பட கண்காட்சி, பூஜை அறை ஆகியவற்றை பார்வையிட்டார்.
அவருடன் துணைத் தலைவர் தமிழ், மாநில பொதுச் செயலாளர் கதிரவன், மத்திய குழு நிர்வாகிகள் கோவிந்த்ராய் (மேற்கு வங்காளம்), பண்டாரா சுரேந்திர ரெட்டி (தெலுங்கானா), மிகர் நந்தி (அசாம்), பிஸ்வாஸ் சக்கரவர்த்தி உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் இருந்தனர்.