/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரம் கோயிலில் ரேவதி தந்தையுடன் தரிசனம்
/
ராமேஸ்வரம் கோயிலில் ரேவதி தந்தையுடன் தரிசனம்
ADDED : மே 23, 2025 02:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமேஸ்வரம்:ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நடிகை ரேவதி தந்தை கேளுன்னியுடன் தரிசனம் செய்தார்.
தமிழ் உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து வருபவர் நடிகை ரேவதி. நேற்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு தந்தை இந்திய ராணுவ முன்னாள் அதிகாரி கேளுன்னியை வீல்சேரில் அழைத்து வந்தார். அவர்களை கோயில் ஊழியர்கள் வரவேற்றனர். ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னதியில் நடந்த சிறப்பு பூஜையில் ரேவதி, தந்தையும் பயபக்தியுடன் தரிசனம் செய்தனர். குருக்கள் அவர்களுக்கு பிரசாதம் வழங்கினார். கோயில் கட்டட கலைகளை கண்டு ரசித்த ரேவதி காரில் மதுரை சென்றார்.