ADDED : ஏப் 27, 2025 06:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை  திருவாடானை தாலுகா அலுவலகம் முன்பு வருவாய்த்துறை சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருவாடானை வட்ட கிளை தலைவர் அமுதன் தலைமை வகித்தார். சமூக நலத்திட்ட தாசில்தார் இந்திரஜித், துணை தாசில்தார் ராமமூர்த்தி மற்றும் நில அளவையர்கள், வி.ஏ.ஓ.க்கள், கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டனர். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, நில அளவைத்துறை உள்ளிட்ட அனைத்து நிலையான அலுவலர்களின் உயிர் மற்றும் உடமைகளை காக்கும் வகையில் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

