ADDED : அக் 29, 2025 09:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம்:  ஆர்.எஸ்.மங்கலம் அருகே சித்துார்வாடி, வெட்டுக்குளம், கலங்காப்புலி, கோவிலேந்தல் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் கடந்த மாதம் நெல் விதைப்பு செய்யப்பட்டது. அதன் பின் சில வாரங்களுக்கு முன்பு பெய்த மழையால் நெற்பயிர்கள் முளைத்தன.
இந்நிலையில், அப்பகுதியில் பெரும்பாலான நெல் வயல்கள் கனமழையால் தண்ணீரில் மூழ்கியது. தொடர்ந்து விவசாயிகள் வயல்களில் இருந்த தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வந்தனர். தற்போது வயல்களில் தண்ணீர் வெளியேறிய நிலையில் நெற்பயிர்கள் பாதிப்படைந்துள்ளன.  பயிர்களை காப்பாற்றும் விதமாக அடி உரம் இடும் பணியை விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர்.

