/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பத்து நாட்களுக்கு பின் மீன் பிடிக்க அனுமதி
/
பத்து நாட்களுக்கு பின் மீன் பிடிக்க அனுமதி
ADDED : அக் 29, 2025 09:35 AM
ராமேஸ்வரம்:  பத்து நாட்களுக்கு பின் இன்று (அக்.,29) ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல மீன்துறையினர் அனுமதி அளித்தனர்.
வங்கக் கடல், மன்னார் வளைகுடா கடலில் உருவான சூறாவளி காற்று, கடல் கொந்தளிப்பு, கனமழையால் அக்., 19 முதல் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல மீன்துறையினர் தடை விதித்தனர். வங்கக்கடலில் உருவான மோந்தா புயல் ஆந்திராவில் கரை கடந்ததால் தமிழக கடலோரத்தில் இயற்கை சீற்றமின்றி இயல்பு நிலைக்கு திரும்பியது. இதனால் மீன்பிடிக்க செல்ல மீன்துறையினர் அனுமதி அளித்தனர். இதையடுத்து 10 நாட்களுக்கு பின் இன்று ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல உள்ளதால் அதிக மீன்கள் சிக்கும் என்ற ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

