/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கை கொடுத்த பருவமழையால் நெல் விவசாயிகள் மகிழ்ச்சி
/
கை கொடுத்த பருவமழையால் நெல் விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : அக் 18, 2025 03:42 AM
ஆர்.எஸ்.மங்கலம்: பருவமழை கை கொடுத்ததால் ஆர்.எஸ். மங்கலம் வட்டார விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதி களில் கடந்த மாதம் நெல் விதைப்பு செய்யப் பட்டது. அதன் பின் போதிய மழை இல்லாததால் நெல் முளைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
சில பகுதிகளில் மீண்டும் நெல் விதைப்பு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு விவசாயிகள் தள்ளப்பட்டனர். இதனால் விவசாயிகளுக்கு கூடுதலாக ஏக்கருக்கு ரூ.5000 வரை இழப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவில் மாவட்டம் முழுவதும் பெய்த கனமழையால் அனைத்து பகுதிகளிலும் நெற்பயிர்கள் முளைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சில பகுதிகளில் முளைத்திருந்த நெற்பயிர்களும் வளர்ச்சி நிலையை அடையும் நிலை ஏற் பட்டுள்ளது.
பருவமழை கை கொடுத்ததாக களைக்கொல்லி மருந்து தெளித்தல், வாய்க்கால், வயல் வரப்புகளை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.