/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கோர்ட் வளாகத்தில் ரகளை: வாலிபர் கைது
/
கோர்ட் வளாகத்தில் ரகளை: வாலிபர் கைது
ADDED : ஜூலை 15, 2025 03:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: திருவாடானை நீதிமன்ற வளாகத்தில் போதையில் ரகளையில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார். தொண்டி அருகே எஸ்.பி.பட்டினத்தை சேர்ந்தவர் பழனி 36. இவர் மீது திருட்டு வழக்கு விசாரணை திருவாடானை நீதிமன்றத்தில் நடக்கிறது. அந்த வழக்கு சம்பந்தமாக ஆஜராவதற்கு நேற்று காலையில் வந்தார்.
அப்போது வளாகத்தில் நின்று கொண்டு போதையில் போலீசார் மற்றும் நீதிமன்ற அலுவலர்களை தரக்குறைவாக பேசி பணி செய்யவிடாமல் ரகளையில் ஈடுபட்டார். நீதிமன்ற தலைமை எழுத்தர் இளமுருகன் புகாரில் திருவாடானை போலீசார் பழனியை கைது செய்தனர்.