/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வைகை ஆற்றில் வெள்ள அபாயம் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
/
வைகை ஆற்றில் வெள்ள அபாயம் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
வைகை ஆற்றில் வெள்ள அபாயம் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
வைகை ஆற்றில் வெள்ள அபாயம் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
ADDED : அக் 27, 2024 03:47 AM
ராமநாதபுரம் : -மதுரை, தேனி மாவட்டங்களில் பெய்யும் கனமழையால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் ராமநாதபுரம் மாவட்டத்தில் வைகை ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் மக்களை எச்சரிக்கை செய்து வெளியேற்றுமாறு பேரிடர் மேலாண்மைத்துறையினர் அறிவித்துள்ளனர்.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் தேனி, மதுரை மாவட்டங்களில் கன மழை பெய்கிறது.
இதனால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பரமக்குடி, ராமநாதபுரம் தாசில்தார்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.
அந்தந்தப் பகுதியில் வைகை கரையோரங்களில் பாதிக்கப்படும் நிலையில் உள்ளவர்களை எச்சரிக்கை செய்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேரிடர் மேலாண்மைத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.