/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மணல் அரிப்பால் ரோடு சேதமடையும் அபாயம்
/
மணல் அரிப்பால் ரோடு சேதமடையும் அபாயம்
ADDED : நவ 07, 2025 03:41 AM

முதுகுளத்துார்: முதுகுளத்துாரில் இருந்து வெங்கலக்குறிச்சி,பொசுக்குடி வழியாக பரமக்குடி செல்லும் ரோட்டோரத்தில் மணல் அரிப்பு ஏற்பட்டு ஆங்காங்கே பள்ளம் உருவாகியுள்ளதால் ரோடு சேதம் அடைய வாய்ப்பு உள்ளது.
முதுகுளத்துாரில் இருந்து வெங்கலக்குறிச்சி, பொசுக்குடி, அலங்கானுார், திருவரங்கம் வழியாக பரமக்குடி செல்வதற்கு ரோடு வசதி உள்ளது. இங்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக ரோடு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வெங்கலக்குறிச்சியில் இருந்து பொசுக்குடி வரை செல்லும் ரோட்டோரத்தில் இருபுறமும் மணல் அரிப்பு ஏற்பட்டு ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டுள்ளது.
மழை பெய்தால் மீண்டும் மணல் அரிப்பு ஏற்பட்டு ரோடு சேதமடையும் நிலை உள்ளது. இதனால் அரசு நிதி வீணடிக்கப்படும் நிலை உள்ளது. எனவே ரோட்டோரத்தில் மணல் அரிப்பை தடுக்கும் வகையில் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.

