/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ரேஷன்கடை முன் நிழற்கூரை இல்லை மழை, வெயிலில் காத்திருக்கும் மக்கள்
/
ரேஷன்கடை முன் நிழற்கூரை இல்லை மழை, வெயிலில் காத்திருக்கும் மக்கள்
ரேஷன்கடை முன் நிழற்கூரை இல்லை மழை, வெயிலில் காத்திருக்கும் மக்கள்
ரேஷன்கடை முன் நிழற்கூரை இல்லை மழை, வெயிலில் காத்திருக்கும் மக்கள்
ADDED : நவ 07, 2025 03:40 AM

தொண்டி: தொண்டி அருகே சின்னத்தொண்டியில் உள்ள ரேஷன் கடை முன்பு நிழற்கூரை அமைத்து இருக்கைகள் அமைக்க மக்கள் வலியுறுத்தினர்.
சின்ன தொண்டி ரேஷன் கடையில் 1200க்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். எம்.ஆர்.பட்டினம், பி.வி.பட்டினம், புதுக்குடி, தட்டார் தெரு, அண்ணாநகர், மலுங்குசாகிபு தெரு போன்ற பல பகுதிகளை சேர்ந்த மக்கள் இக் கடைக்கு சென்று பொருட்கள் வாங்குகின்றனர். கைரேகை வைத்து வாங்குவதால் பொருட்கள் வழங்க தாமாகிறது. மக்கள் நீண்ட நேரம் காத்திருக்கின்றனர். கடைக்கு முன்பு நிழற்கூரை இல்லாததால் வெயில், மழையில் பாதிக்கப்படுகின்றனர்.
எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தில் ரூ.12.50 லட்சத்தில் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. ரேஷன் கடைக்கு முன்பும் நிழற்கூரை, இருக்கைகள் அமைக்கப்படும் என அரசு அறிவித்தது. ஆனால் அதற்கான நடவடிக்கையை எடுக்கவில்லை. வெயில், மழையில் இருந்து பாதுகாக்கும் வகையில் உடனடியாக நிழற்கூரை அமைக்க வேண்டும் என மக்கள் கூறினர்.