ADDED : அக் 29, 2024 04:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டி: தொண்டி போலீஸ் ஸ்டேஷன் செல்லும் ரோட்டோரத்தில் குடிநீர் பிடிப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளம் உள்ளது.
இப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இரவு நேரத்தில் நடந்து செல்பவர்களும், டூ வீலர்களில் செல்பவர்களும் அந்த பள்ளத்தில் தவறி விழ வாய்ப்பு உள்ளது. விபத்து ஏற்படும் முன் பள்ளத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.