/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆற்றில் திரியும் மாடுகளுக்கு ஆபத்து: பாதுகாக்க வலியுறுத்தல்
/
ஆற்றில் திரியும் மாடுகளுக்கு ஆபத்து: பாதுகாக்க வலியுறுத்தல்
ஆற்றில் திரியும் மாடுகளுக்கு ஆபத்து: பாதுகாக்க வலியுறுத்தல்
ஆற்றில் திரியும் மாடுகளுக்கு ஆபத்து: பாதுகாக்க வலியுறுத்தல்
ADDED : ஜன 18, 2024 05:50 AM

பரமக்குடி: -பரமக்குடி வைகை ஆற்றில் கூட்டமாக திரியும் மாடுகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் உள்ளது. விபத்திற்கு முன்பாக அவற்றை பாதுகாக்க உரிமையாளர்கள் முன்வர வேண்டும்.
பரமக்குடி நகராட்சியில் தெருக்களில் நாய்களுக்கு இணையாக மாடுகளும் சுற்றி திரிகின்றன. இதை தடுக்க மாடுகளை கட்டுப்படுத்த தெருக்களில் திரிவதை பிடித்து நகராட்சி சார்பில் அபராதம் விதித்தனர் நாளிதழ்களில் விளம்பரம் செய்து கட்டுப்படுத்த முயற்சி செய்தனர்.
ஆனால் கடந்த சில மாதங்களாக கன்று குட்டிகளையும் தெருவில் உணவிற்காக அலையவிடும் நிலை அதிகரித்துள்ளது. வைகை ஆற்று பகுதி மாடுகள் ஓய்வெடுக்கும் தளமாக மாற்றியுள்ளது.
வைகையில் தண்ணீர் வரும்போது அவை சிக்கி பலியாவது வாடிக்கையாக உள்ளது. சர்வீஸ் ரோடு, நெடுஞ்சாலைகளில் ஓய்வு எடுக்கும் மாடுகளால் டூவீலர் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகின்றனர்.
இதேபோல் வைகை ஆற்று பகுதியில் மாடுகள் பலியானால் யார் பொறுப்பு ஏற்பது என்ற கேள்வி எழுந்துள்ளது.
மாடுகளை பாதுகாக்க அவற்றின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும்.