/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காட்சி பொருளான ஆர்.ஓ., பிளான்ட்
/
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காட்சி பொருளான ஆர்.ஓ., பிளான்ட்
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காட்சி பொருளான ஆர்.ஓ., பிளான்ட்
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காட்சி பொருளான ஆர்.ஓ., பிளான்ட்
ADDED : பிப் 02, 2025 05:17 AM

திருப்புல்லாணி : திருப்புல்லாணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த ஆண்டு ஆக.,ல் அமைக்கப்பட்ட புதிய ஆர்.ஓ., பிளான்ட் செயல்படாமல் காட்சிப்பொருளாக உள்ளது.
கிணற்று நீரை பயன்படுத்தி அவற்றை உரிய முறையில் சுத்திகரிப்பு செய்து பல்வேறு நவீன வசதிகளுடன் ரூ.10 லட்சத்தில் அமைக்கப்பட்ட ஆர்.ஓ., பிளான்ட் செயல்படவில்லை.
இதுகுறித்து சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் கூறியதாவது:
திருப்புல்லாணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நாள்தோறும் ஏராளமான புறநோயாளிகள் வருகின்றனர். பொதுமக்கள் மற்றும் நோயாளிகளின் குடிநீர் பயன்பாட்டிற்காக ஆர்.ஓ., பிளான்டை ஓ.என்.ஜி.சி., நிறுவனம் தன்னார்வ சேவை திட்டத்தில் அமைத்துள்ளனர்.
இவற்றை முறையாக பராமரிக்காததால் ஆர்.ஓ., பிளான்ட் சுத்திகரிப்பு செய்து தரக்கூடிய இயந்திரம் பழுதாகி பயன்பாடின்றி உள்ளது. பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் குடிநீர் கேன் மற்றும் டம்ளர் வைக்கப்பட்டுள்ளது.
ஓ.என்.ஜி.சி., மூலம் மேற்கொள்ளக்கூடிய பணிகள் பல லட்சம் மதிப்பீட்டில் பொதுமக்களுக்கு பயன் தந்தாலும் அவற்றை உரிய முறையில் பராமரிப்பு செய்வதற்கான பணிகள் மெத்தனமாகவே உள்ளது. இதனால் பெரிய தொகை செலவழிக்கப்பட்ட இத்திட்டம் பயன்பாடின்றி அரசு நிதி வீணடிக்கப்படுகிறது. சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.