/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராட்சத அலையால் ரோடு சேதம்; அமைச்சருக்காக அவசர சீரமைப்பு
/
ராட்சத அலையால் ரோடு சேதம்; அமைச்சருக்காக அவசர சீரமைப்பு
ராட்சத அலையால் ரோடு சேதம்; அமைச்சருக்காக அவசர சீரமைப்பு
ராட்சத அலையால் ரோடு சேதம்; அமைச்சருக்காக அவசர சீரமைப்பு
ADDED : நவ 23, 2024 06:41 AM

ராமேஸ்வரம்; ராமேஸ்வரத்தில் கடல் கொந்தளிப்பால் எழுந்த ராட்சத அலையால் சேதமடைந்த ரோட்டை அமைச்சர் ஆய்வுக்காக மணல் மூடைகளை அடுக்கி தற்காலிகமாக சீரமைத்தனர்.
ராமேஸ்வரத்தில் 3 நாட்களாக சூறாவளிக் காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு ராட்சத அலைகள் எழுந்தது.
இதில் நவ.20ல் ராமேஸ்வரத்தில் இருந்து ஓலைக்குடா மீனவர் கிராமத்திற்கு செல்லும் தார் ரோடு கடல் அரிப்பால் 100 அடி துாரம் சேதமடைந்தது. இதனால் மீனவர்கள் சிரமத்துடன் வீடுகளுக்கு கடந்து சென்றனர்.
இந்நிலையில் நேற்று அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் மழையால் பாதிக்கப்பட்ட பகுதியை ஆய்வு செய்ய வந்ததால் ராமேஸ்வரம் நகராட்சி ஊழியர்கள் அவசரமாக 200 மணல் மூடைகளை அடுக்கி தற்காலிகமாக சீரமைத்தனர். 3 நாட்களாக சேதமடைந்த ரோட்டை சீரமைக்க பலமுறை வலியுறுத்தியும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.
தற்போது அடுக்கிய மணல் மூடைகள் அடுத்து வீசும் ராட்சத அலையில் காணாமல் போய் விடும். எனவே கடற்கரையில் பாறாங்கற்களை கொட்டி சாலையை பாதுகாக்க வேண்டும் என மீனவர்கள் தெரிவித்தனர்.