/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடியில் ரோடு ஆக்கிரமிப்பு தொடரும் போக்குவரத்து நெரிசல்
/
பரமக்குடியில் ரோடு ஆக்கிரமிப்பு தொடரும் போக்குவரத்து நெரிசல்
பரமக்குடியில் ரோடு ஆக்கிரமிப்பு தொடரும் போக்குவரத்து நெரிசல்
பரமக்குடியில் ரோடு ஆக்கிரமிப்பு தொடரும் போக்குவரத்து நெரிசல்
ADDED : ஜன 21, 2025 05:46 AM

பரமக்குடி: பரமக்குடியில் ரோடு ஆக்கிரமிப்பால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் வாடிக்கையாகியுள்ளது. சப் கலெக்டர் அபிலாஷா கவுர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.
பரமக்குடி பஸ் ஸ்டாண்ட் பகுதி தொடங்கி நகர் முழுவதும் ஆக்கிரமிப்பு மற்றும் வாகனங்களை நிறுத்தி வைப்பதால் நெரிசல் அதிகரித்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு சப் கலெக்டர் பஸ் ஸ்டாண்ட், பெரிய பஜார் உள்ளிட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது கடைகளுக்கு முன்பு பொருட்களை வைத்து போக்குவரத்து நெரிசலை உண்டாக்குவோரை கண்டித்தார். மேலும் வரும் நாட்களில் பொருட்கள் மற்றும் படிகளை கட்டி வைத்து ஆக்கிரமிப்பில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், என்றார். ஆனால் இது குறித்து வருவாய்த் துறையினர், நகராட்சி சார்பில் எந்த தொடர் நடவடிக்கையும் இல்லாமல் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
தினமும் பள்ளி மாணவர்கள், பணிக்கு செல்வோர் என நெரிசலுக்கு மத்தியில் தவிக்கின்றனர். பஸ் ஸ்டாண்ட் வந்து செல்லும் பஸ்களும் முறையாக நிறுத்தி வைக்க முடியாமல் பயணிகள் ஏற வசதியின்றி திணறுகின்றனர்.
ஆகவே நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

