/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ரோடு, குடிநீர் கேட்கும் வெள்ளாளக்கோட்டை
/
ரோடு, குடிநீர் கேட்கும் வெள்ளாளக்கோட்டை
ADDED : மார் 18, 2025 10:59 PM
ராமநாதபுரம்: திருவாடானை தாலுகா முகிழ்த்தகம் ஊராட்சி வெள்ளாளக்கோட்டை கிராமத்தில் ரோடு சேதமடைந்துள்ளது. 2 மாத்திற்கு ஒருமுறை காவிரி குடிநீர் வருவதால் மக்கள் சிரமப்படுகின்றனர்.
வெள்ளாளக்கோட்டை (ஏசுபுரம்) கிராம மகளிர் மன்றத்தினர், மக்கள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில், ஏசுபுரத்தில் இருந்து நம்புதாளை வரை 3 கி.மீ., ரோடு சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன போக்குவரத்திற்கு மிகவும் சிரமப்படுகிறோம்.
ரோடு அமைத்து தர வேண்டும். 2 மாதங்களுக்கு ஒருமுறை குடிநீர் பெயரளவில் வருகிறது, அதுவும் அசுத்தமாக வருகிறது. தினசரி சுத்தமான குடிநீர் வழங்க குழாய்களை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தினர்.