/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஜல் ஜீவன் திட்டப் பணிகளை விரைந்து முடிங்க கிடப்பில் ரோடு பணிகள்
/
ஜல் ஜீவன் திட்டப் பணிகளை விரைந்து முடிங்க கிடப்பில் ரோடு பணிகள்
ஜல் ஜீவன் திட்டப் பணிகளை விரைந்து முடிங்க கிடப்பில் ரோடு பணிகள்
ஜல் ஜீவன் திட்டப் பணிகளை விரைந்து முடிங்க கிடப்பில் ரோடு பணிகள்
ADDED : ஜன 17, 2025 05:11 AM

சாயல்குடி: சாயல்குடி பேரூராட்சியில் 2023ல் கொண்டுவரப்பட்ட ஜல்ஜீவன் திட்டப்பணிகள் இதுவரை முறையாக முடிக்கப்படாமல் தொய்வு நிலையில் உள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.
சாயல்குடி பேரூராட்சியில் 1 முதல் 15 வார்டுகள் உள்ளன. 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். நாடார் தெரு, அரண்மனை வீதி, வி.வி.ஆர்.நகர், வடக்குத்தெரு, சதுரயுகவல்லி நகர், துரைச்சாமிபுரம், இருவேலி உள்ளிட்ட தெருக்கள் உள்ளன. மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டம் வீடுகள் தோறும் தங்கு தடையின்றி தண்ணீர் கிடைப்பதற்கும், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்கும் வழி வகுக்கப்பட்டுள்ளது.
2023ல் துவக்கப்பட்ட ஜல்ஜீவன் திட்டப் பணிகள் சாயல்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் செயல்படுத்த ரூ.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்ட ஐந்து இடங்களில் ஒன்றரை லட்சம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க திட்ட மதிப்பீடு தயாரிக்கும் பணிகள் கிடப்பில் உள்ளது.
பணிகளை கடந்த 2024 அக்., மாதம் இறுதிக்குள் முடிக்க வேண்டும். ஆனால் தற்போது வரை பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர். 6-வது வார்டு பேரூராட்சி கவுன்சிலர் மாணிக்கவள்ளி கூறியதாவது:
சாயல்குடியில் அனைவருக்கும் தங்கு தடையின்றி குடிநீர் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் கரூர் குடிநீர் திட்டத்தில் ஜல்ஜீவன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஒன்றரை லட்சம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்க ஐந்து இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த பணிகள் மிகவும் தொய்வாக நடக்கிறது. இதனால் சாயல்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட சேதமடைந்த சாலைகளை சீரமைத்து புதிய சாலைகள் அமைக்க வழியின்றி உள்ளது.
ஜல்ஜீவன் திட்டப் பணிகளுக்காக குழாய்கள் அமைத்த பிறகு தான் சாலை அமைத்தல் உள்ளிட்ட இதர பணிகளை துவங்க வேண்டும் என குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறுவதாக பேரூராட்சி நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.
எனவே சாயல்குடி பேரூராட்சியில் தரமான முறையில் கட்டுமான பணிகளை மேற்கொண்டு அனைவருக்கும் ஜல்ஜீவன் திட்டம் முறையாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மற்றும் தொடர்புடைய ஜல்ஜீவன் திட்ட அதிகாரிகள் துரிதமாக பணிகளை கண்காணித்து ஆய்வு செய்ய வேண்டும் என்றனர்.