ADDED : ஜன 09, 2024 12:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
-ராமநாதபுரம், : ராமநாதபுரம் செய்யது அம்மாள் கலை அறிவியல் கல்லுாரி மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு கருத்தரங்கம் நடந்தது.
முதல்வர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். வேலை வாய்ப்பு திட்ட அலுவலர் பிரதீப் ராஜேஸ் வரவேற்றார். கோவை ஜீக்கர்ஸ் டெக்னாலஜி ரமேஷ்குமார் வேலை வாய்ப்பின் முக்கியத்துவம் எண்ணற்ற வேலை வாய்ப்பு நிறுவனத்தை மாணவர்களிடையே அறிமுகம் செய்து பேசினார்.
ஐந்து நாட்கள் மாணவர்களுக்கு அடிப்படை ரோபோடிக்ஸ் என்ற தலைப்பில் நுாறு மாணவர்களுக்கு பயிற்சியளித்தனர். தாளாளர் செல்லதுரை அப்துல்லா, செய்யதம்மாள் மெட்ரிக் பள்ளி தாளாளர் ராஜாத்தி அப்துல்லா மாணவர்களை பாராட்டினர்.
தமிழ்துறை உதவிப்பேராசிரியர் ரவிக்குமார் நன்றி கூறினார்.