/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரம் கோயிலில் தவறவிட்ட ரூ.43,000: பக்தரிடம் ஒப்படைப்பு
/
ராமேஸ்வரம் கோயிலில் தவறவிட்ட ரூ.43,000: பக்தரிடம் ஒப்படைப்பு
ராமேஸ்வரம் கோயிலில் தவறவிட்ட ரூ.43,000: பக்தரிடம் ஒப்படைப்பு
ராமேஸ்வரம் கோயிலில் தவறவிட்ட ரூ.43,000: பக்தரிடம் ஒப்படைப்பு
ADDED : அக் 12, 2025 11:04 PM
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோயிலில் புனித நீராடிய ஒடிசா பக்தர் தவறவிட்ட ரூ.43 ஆயிரத்து 500த்தை தீர்த்தம் இறைத்து ஊற்றும் யாத்திரை பணியாளர் எடுத்து ஒப்படைத்தார்.
ஒடிசா கோராபட் சேர்ந்த ராமமுடுலி 55. இவர் உறவினர்களுடன் நேற்று காலை ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களில் புனித நீராடினார். அப்போது இவர் பையில் வைத்திருந்த ரூ.43 ஆயிரத்து 500த்தை தவறவிட்டுவிட்டார்.
சிறிது நேரத்திற்கு பின் பணம் இருந்த பை காணாமல் போனதை கண்டு அழுது புலம்பினார். இதற்கிடையில் அப்பை கோயில் 22வது தீர்த்தம் அருகே கிடந்தது.
இதனை யாத்திரை பணியாளர் சங்கம் நிர்வாகி மீனாட்சிசுந்தரம் எடுத்து, ஒடிசா பக்தரிடம் ஒப்படைத்தார்.
மேலும் மதுரை சேர்ந்த பெண் பக்தர் ஒருவர் கோயிலுக்குள் நீராடிய போது பர்சில் இருந்த ரூ.4800த்தை தவறவிட்டார். இதனை யாத்திரை பணியாளர் சங்க செயலாளர் வெள்ளைச்சாமி எடுத்து, பெண் பக்தரிடம் ஒப்படைத்தார்.
யாத்திரை பணியாளர் சங்கத்தினரின் இச்செயலை பலரும் பாராட்டினர்.