/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆர்.எஸ்.மங்கலம் வட்டார நீரினை பயன்படுத்துவோர் சங்க கூட்டம்
/
ஆர்.எஸ்.மங்கலம் வட்டார நீரினை பயன்படுத்துவோர் சங்க கூட்டம்
ஆர்.எஸ்.மங்கலம் வட்டார நீரினை பயன்படுத்துவோர் சங்க கூட்டம்
ஆர்.எஸ்.மங்கலம் வட்டார நீரினை பயன்படுத்துவோர் சங்க கூட்டம்
ADDED : செப் 25, 2024 05:52 AM

ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் வட்டார நீரினை பயன்படுத்துவோர் சங்க கூட்டம் தாலுகா தலைவர் சோழந்துார் பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் சரவணன், பொருளாளர் புரோஸ்கான், ஆலோசனைக் குழு தலைவர்கள் சொக்கநாதன், வெங்கடாஜலபதி முன்னிலை வகித்தனர்.
மழைக்காலத்தில் மழை நீர் வீணாவதை தடுக்கும் விதமாக வரத்து கால்வாய்களை முறையாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரதான் திட்டத்தில் விவசாயிகளின் பங்களிப்பு தொகை, மற்றும் தொண்டு நிறுவன நிதியுடன் கண்மாய்கள், ஊருணிகள், வரத்து கால்வாய்கள் மராமத்து செய்வதற்கு அனைத்து விவசாயிகளும், ஒன்றிணைந்து தங்களது பகுதி தேவைகளை நிறைவேற்ற முன்வர வேண்டும்.
ஒவ்வொரு கிராமங்களிலும் உள்ள விவசாயிகளை கலந்து பேசி முக்கிய பிரச்னைகளுக்கு முன்னுரிமை அளித்து பிரச்சனைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் பொதுப்பணித்துறை பொறியாளர் மாயகிருஷ்ணன் உட்பட சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.