/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆர்.எஸ்.மங்கலம் தேசிய நெடுஞ்சாலை சென்டர் மீடியனில் விபத்துகள் ஒளிரும் எச்சரிக்கை பலகை தேவை

ADDED : அக் 05, 2024 03:58 AM

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் மங்கலம் சென்டர்மீடியன் பகுதியில் வாகன ஓட்டிகள் அறிந்து கொள்ளும் வகையில் ஒளிரும் எச்சரிக்கை பலகையோ, மின் விளக்குகளோ இல்லாததால் வாகன ஓட்டிகள் விபத்துக்களில் சிக்குகின்றனர்.
திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை ஆர்.எஸ்.மங்கலம் அருகே மங்கலம் கிராமத்தை ஒட்டி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தேசிய நெடுஞ்சாலையில் சென்டர் மீடியன் அமைக்கப்பட்டது. இந்நிலையில் சென்டர் மீடியன்அமைந்துள்ள பகுதியில் ரோட்டின் நடுவில் உள்ள சென்டர் மீடியன் கனரக வாகன ஓட்டிகளுக்கு தெரிவதில்லை.
எனவே இரவில் ஒளிரும் எச்சரிக்கை பலகைகளோ, எச்சரிக்கை விளக்குகளோ இல்லாததால் வெளி மாநிலங்களில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் இரவில் சென்டர் மீடியன் இருப்பது தெரியாமல் மோதி விபத்துக்கள் ஏற்படுகின்றன.
இப்பகுதியில் இரவில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவது குறித்து நெடுஞ்சாலை துறையினருக்கு தெரிந்திருந்தும் அப்பகுதியில் முறையான எச்சரிக்கை விளக்குகளோ, மின் விளக்குகளோ அமைப்பதற்கும், சேதமடைந்த எச்சரிக்கை பலகைகளை சீரமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்காத நிலை தொடர்கிறது.
எனவே வாகன ஓட்டிகள் விபத்துக்களில் சிக்குவதை தவிர்க்கும் விதமாக ரோட்டின் நடுவில் செண்டர் மீடியன் இருப்பதை வாகன ஓட்டிகள் அறிந்து கொள்ளும் வகையில் உயரமான எச்சரிக்கை விளக்குகள் மற்றும் எச்சரிக்கைபலகைகளை பொருத்த நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர்.