/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இளம்பெண் தற்கொலை ஆர்.டி.ஓ., விசாரணை
/
இளம்பெண் தற்கொலை ஆர்.டி.ஓ., விசாரணை
ADDED : செப் 30, 2025 03:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: திருவாடானை அருகே சம்பந்தவயல் கிராமத்தை சேர்ந்தவர் சுபேதா 19. இவருக்கும் பிரவீன்ராஜ் என்பவருக்கும் ஐந்து மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
பிரவீன்ராஜ் மூன்று மாதத்திற்கு முன்பு வெளிநாடு சென்று விட்டார். மாமனார், மாமியாருடன் சுபேதா வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சுபேதா துாக்கிட்டு தற்கொலை செய்தார்.
போலீசார் உடலை மீட்டு திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ராமநாதபுரம் ஆர்.டி.ஓ., ஹபிபூர்ரகுமான் விசாரணை செய்தார். தற்கொலைக்கான காரணம் குறித்து திருவாடானை டி.எஸ்.பி., சீனிவாசன் மற்றும் போலீசார் விசாரிக்கின்றனர்.