/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வாழும் கலை அமைப்பு நடத்தும் ருத்ர யாக பூஜை ஜன.30ல் நடக்கிறது
/
வாழும் கலை அமைப்பு நடத்தும் ருத்ர யாக பூஜை ஜன.30ல் நடக்கிறது
வாழும் கலை அமைப்பு நடத்தும் ருத்ர யாக பூஜை ஜன.30ல் நடக்கிறது
வாழும் கலை அமைப்பு நடத்தும் ருத்ர யாக பூஜை ஜன.30ல் நடக்கிறது
ADDED : ஜன 03, 2026 06:48 AM
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் ஜன.,30ல் வாழும் கலை அமைப்பு சார்பில் மகா ருத்ர யாக பூஜை நடக்க உள்ளது.
வாழும் கலை அமைப்பு சார்பில் ராமேஸ்வரத்தில் இருந்து காந்த ஈர்ப்பு சக்தி கொண்ட சிவலிங்கத்தை எடுத்துச் சென்று குஜராத்தில் உள்ள சோமநாதர் கோயிலில் பிரதிஷ்டை செய்ய உள்ளனர்.
இதற்காக ஜன.,30ல் வாழும் கலை அமைப்பு நிர்வாகி ரவிசங்கர் வருகை தந்து மகாருத்ர யாக பூஜை நடத்த உள்ளார்.
இவ்விழா நடத்துவது குறித்து பா.ஜ., ராமநாதபுரம் மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் ஹிந்து முன்னணி மாவட்ட தலைவர் ராமமூர்த்தி, பா.ஜ., நகர் தலைவர் மாரி, நகராட்சி கவுன்சிலர் சங்கர், சேவா பாரதி மாவட்ட துணைத் தலைவர் சுடலை, ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் முருகன், ராமேஸ்வரம் வாழும் கலை அமைப்பு நிர்வாகிகள் ஏராள மானோர் பங்கேற்றனர்.
பா.ஜ., முரளிதரன் கூறுகையில், ஜன.,30ல் ராமேஸ்வரத்தில் ரவிசங்கர் தலைமையில் காந்த ஈர்ப்பு சக்தி கொண்ட சிவலிங்கத்திற்கு மகாருத்ர யாக பூஜை நடக்கவுள்ளது. இந்த சிவலிங்கத்தை எடுத்துச் சென்று குஜராத் சோமநாதர் கோயிலில் பிரதிஷ்டை செய்ய உள்ளார் என்றார்.

