/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மார்கழியை முன்னிட்டு கலர் கோலப்பொடிகள் விற்பனை
/
மார்கழியை முன்னிட்டு கலர் கோலப்பொடிகள் விற்பனை
ADDED : டிச 13, 2025 05:23 AM

ராமநாதபுரம்: மார்கழி மாதத்தை முன்னிட்டு ராமநாதபுரம் பகுதியில் பல வண்ண கோலப்பொடிகள் விற்பனைக்கு வந்துள்ளன. பெண்கள் ஆர்வத்துடன் வாங்குகின்றனர்.
மார்கழி மாதம் அதிகாலை வீடுகள், கோயில்களில் பல வண்ணங்களில் ரங்கோலி கோலமிடுவது வழக்கம். இவ்வாண்டும் ராமநாதபுரம் அரண்மனை சந்தைப்பகுதி, வண்டிக்காரத்தெரு உள்ளிட்ட இடங்களில் பல வண்ணங்களில் கோலப்பொடி விற்பனைக்கு வந்துள்ளன. மக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.
ராமநாதபுரம் இளங்கோவடிகள் தெருவில் கோலப்பொடி தயாரிக்கும் பணி மும்முரமாக நடக்கிறது. மழை காரணமாக கோலப்பொடிகளை காய வைப்பதில் சிரமம் காரணமாக குறைந்த அளவே வந்துள்ளதால் விலை உயர்ந்து ஒரு பாக்கெட் ரூ.5 முதல் ரூ.7 வரை விற்பதாக வியாபாரிகள் கூறினர்.

