/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மகளிர் உரிமை தொகை நிகழ்ச்சியில் காத்திருந்து சிரமப்பட்ட பெண்கள்
/
மகளிர் உரிமை தொகை நிகழ்ச்சியில் காத்திருந்து சிரமப்பட்ட பெண்கள்
மகளிர் உரிமை தொகை நிகழ்ச்சியில் காத்திருந்து சிரமப்பட்ட பெண்கள்
மகளிர் உரிமை தொகை நிகழ்ச்சியில் காத்திருந்து சிரமப்பட்ட பெண்கள்
ADDED : டிச 13, 2025 05:22 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் நடந்த இரண்டாம் கட்ட மகளிர் உரிமைத் தொகை வழங்கும் துவக்க விழா நிகழ்ச்சியில் மதியம் 2:00 முதல் இரவு 7:30 வரை காத்திருந்து பெண்கள் சிரமப்பட்டனர்.
தமிழகத்தில் இரண்டாம் கட்டமாக பெண்களுக்கான உரிமைத் தொகை வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். அதைத்தொடர்ந்து ராமநாதபுரம் தனியார் மகாலில் நடந்த நிகழ்ச்சியில் பெண்களுக்கு மகளிர் உரிமை தொகைக்கான அடையாள அட்டை வழங்க ஏற்பாடு செய்தனர்.
இந்நிகழ்ச்சிக்காக மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் ஏராளமான பெண்கள் மதியம் 2:00 மணிக்கே வந்திருந்தனர். இந்நிலையில் அடையாள அட்டை வழங்க இரவு 7:00 மணி வரை காலதாமதமான காரணத்தால் பலர் புறப்பட்டு சென்றதால் ஏராளமான சேர்கள் காலியாக கிடந்தன. நிகழ்ச்சி 10 நிமிடங்களில் முடிந்து விடும் என மைக்கில் தொடர்ந்து அறிவித்த போதும் அரை மணி நேரத்திற்கு மேலாகியும் முடியாத காரணத்தால் பெண்கள் இரவு 7:30 மணி வரை காத்திருந்து சிரமப்பட்டனர்.
வெளியூர்களில் இருந்து வந்த பெண்களின் பாதுகாப்பு கருதி இனிவரும் காலங்களில் இதுபோன்ற அரசு நிகழ்ச்சிகளை விரைவில் முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.

