/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஏர்வாடி தர்காவில் சந்தனக்கூடு விழா ஏப். 29ல் மவுலீதுடன் துவக்கம்
/
ஏர்வாடி தர்காவில் சந்தனக்கூடு விழா ஏப். 29ல் மவுலீதுடன் துவக்கம்
ஏர்வாடி தர்காவில் சந்தனக்கூடு விழா ஏப். 29ல் மவுலீதுடன் துவக்கம்
ஏர்வாடி தர்காவில் சந்தனக்கூடு விழா ஏப். 29ல் மவுலீதுடன் துவக்கம்
ADDED : ஏப் 22, 2025 07:08 AM
கீழக்கரை : ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் அல் குத்புல் சுல்தான் செய்யது இப்ராஹிம் பாதுஷா நாயகம் ஒலியுல்லாஹ் தர்கா சந்தனக்கூடு விழா ஏப்.,29ல் மவுலீதுடன் துவங்குகிறது.
இங்கு மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக ஒவ்வொரு ஆண்டும் சந்தனக்கூடு விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
இவ்வாண்டில் 851ம் ஆண்டின் சந்தனக்கூடு என்னும் மத நல்லிணக்க விழாவில் முதல் நிகழ்ச்சியாக ஏப்., 19ல் தர்கா ஷரீப் மண்டபத்தில் மவுலீது எனப்படும் (புகழ் மாலை) மார்க்க அறிஞர்களால் தொடர்ந்து 23 நாட்களுக்கு ஓதப்படுகிறது.
மே 9ல் ஏர்வாடி பாதுஷா நாயகத்தின் பச்சை வண்ண பிறை கொடி யானை மீது வைத்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு தர்கா முன் கொடி மரத்தில் கொடியேற்றம் நடக்க உள்ளது.
உரூஸ் எனப்படும் சந்தனக்கூடு விழா மே 21 மாலை துவங்கி மறுநாள் மே 22 அதிகாலை புனித மக்பராவில் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை ஏர்வாடி தர்கா ஹக்தார் நிர்வாக சபையினர் செய்து வருகின்றனர்.