/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
முதுகுளத்துாரில் குப்பையால் சுகாதாரக்கேடு: மக்கள் அவதி
/
முதுகுளத்துாரில் குப்பையால் சுகாதாரக்கேடு: மக்கள் அவதி
முதுகுளத்துாரில் குப்பையால் சுகாதாரக்கேடு: மக்கள் அவதி
முதுகுளத்துாரில் குப்பையால் சுகாதாரக்கேடு: மக்கள் அவதி
ADDED : மார் 05, 2024 05:06 AM

முதுகுளத்துார் : முதுகுளத்துார் பேரூராட்சி நிர்வாகத்தின் தடையை மீறி, தெருவில்குப்பையை கொட்டுவதால் மக்கள் சுகாதாரக்கேட்டால் பாதிக்கப்படுகின்றனர்.
பேரூராட்சிக்குட்பட்ட 15 வார்டுகளில் கடைகள் மற்றும் வீடுகளில் வீடுகளுக்கு சென்று குப்பையை துாய்மை பணியாளர்கள் வாங்குகின்றனர். திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மக்கும் குப்பை, மக்கா குப்பை என்று தனியாக பிரித்து உரங்கள் தயார் செய்து விநியோகம் செய்து வருகின்றனர்.
பேரூராட்சி தலைவர் ஷாஜகான், செயல் அலுவலர் செல்வராஜ் உத்தரவில் பணியாளர்கள் குப்பைகள் கொட்டும் இடத்தை சுத்தம் செய்து மரக்கன்றுகள், பூச்செடிகள் நட்டு வைத்து பூங்காவாக மாற்றி விழிப்புணர்வு பலகை வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் முதுகுளத்துார்- -- கடலாடி சாலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பு விழிப்புணர்வு பலகை வைத்தும் குப்பையை கொட்டுகின்றனர். அவர்கள் மீது பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

