/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பட்டுப்போய் வீணாகி வரும் மரக்கன்றுகள்: நிதி வீணடிப்பு
/
பட்டுப்போய் வீணாகி வரும் மரக்கன்றுகள்: நிதி வீணடிப்பு
பட்டுப்போய் வீணாகி வரும் மரக்கன்றுகள்: நிதி வீணடிப்பு
பட்டுப்போய் வீணாகி வரும் மரக்கன்றுகள்: நிதி வீணடிப்பு
ADDED : டிச 29, 2025 06:54 AM

முதுகுளத்துார்: முதுகுளத்துார் - ராமநாதபுரம் ரோடு தேரிருவேலி அருகே நெடுஞ்சாலைத்துறை சார்பில் மரக்கன்றுகள் வைக்கப்பட்டுள்ள நிலையில் பட்டுப்போய் வீணாகியுள்ளதால் அரசின் நிதி வீணடிக்கப்படுகிறது.
முதுகுளத்துார் - ராமநாதபுரம் ரோடு தேரிருவேலி, மட்டியாரேந்தல் அதனை சுற்றியுள்ள கிராமத்தில் ரோட்டோரத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் வேப்ப மரம், புளியமரம் உட்பட 500க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நட்டு வலை அமைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களாகவே புதிதாக மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டு வரும் நிலையில் முறையாக தண்ணீர் ஊற்றப்படாததால் மரக்கன்று பட்டுப்போய் வாடி வருகிறது.
இதனால் அரசின் நிதி வீணடிக்கப்படுகிறது. புதிதாக மரக்கன்றுகள் வைக்கப்பட்டு சில நாட்களிலேயே பட்டுப்போய் வருவதால் மரக்கன்று வைத்து பயனில்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து மரக்கன்றுகளை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

