/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
திருவெற்றியூர் கோயில் குளம் நிரம்பியது
/
திருவெற்றியூர் கோயில் குளம் நிரம்பியது
ADDED : டிச 29, 2025 06:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயில் குளம் நிரம்பியதால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்தனர். திருவாடானை அருகே திருவெற்றியூரில் பாகம்பிரியாள் கோயில் உள்ளது. செவ்வாய், வெள்ளி நாட்களிலும், சித்திரை, ஆடி மாதங்களில் நடைபெறும் திருவிழாவின் போதும் ஏராளமான பக்தர்கள் கூடுவார்கள். கோயில் முன்பு தீர்த்த தெப்பக்குளம் உள்ளது. பக்தர்கள் இங்கு நீராடி சுவாமி தரிசனம் செய்வார்கள்.
கடந்த சில ஆண்டுகளாக பருவமழை தக்க நேரத்தில் மழை பெய்து வருவதால் குளம் நிரம்பியது. அதுபோல் இந்த ஆண்டும் பெய்த மழையால் குளம் நிரம்பியதால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

