ADDED : டிச 05, 2025 06:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகராட்சி அலுவலகம் பின்புறம் உள்ள சவேரியார் சர்ச் திருவிழா நவ.,24ல் கொடியேற்றத்துடன் துவங்கி டிச.,3 வரை நடந்தது.விழாவை முன்னிட்டு தினமும் மாலையில் திருஜெபமாலையும்,நவநாள் ஜெபம், திருப்பலி பிரார்த்தனை நடந்தது.
முக்கியநிகழ்ச்சியாக நேற்று முன்தினம் இரவு மின்னொளியில்அலங்கரிக்கப்பட்ட சவேரியார் தேர் பவனி நடந்தது. முக்கியவீதிகளில் உலா வந்தது. பாதிரியார் மறைமாவட்ட அதிபர்சிங்கராயர், பாதிரியார் இனிக்கோ ஆனந்த் உட்பட பலர் பங்கேற்றனர்.

