/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
திருவாடானை-ஓரியூர் சாலையில் 2வது நாளாக போக்குவரத்து 'கட்'
/
திருவாடானை-ஓரியூர் சாலையில் 2வது நாளாக போக்குவரத்து 'கட்'
திருவாடானை-ஓரியூர் சாலையில் 2வது நாளாக போக்குவரத்து 'கட்'
திருவாடானை-ஓரியூர் சாலையில் 2வது நாளாக போக்குவரத்து 'கட்'
ADDED : டிச 05, 2025 06:23 AM
திருவாடானை: திருவாடானை பகுதியில் பெய்த கனமழையால் 2வது நாளாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதால் கடந்த சில நாட்களாக திருவாடானை, தொண்டி பகுதியில் பலத்த மழை பெய்தது. திருவாடானையில் இருந்து ஓரியூர் செல்லும் சாலையில் நகரிகாத்தான் தரைபாலத்தில் பல அடி உயரத்திற்கு மேல் வெள்ளம் சென்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இப்பாலத்தை உயர்த்தி கட்டும் பணி சில மாதங்களுக்கு முன்பு துவங்கியது.
இதில் வாகனங்கள் செல்லும் வகையில் பக்கவாட்டு சாலை அமைக்கப்பட்டது. மழையால் சாலை துண்டிக்கப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பாண்டுகுடி, வெள்ளையபுரம், ஓரியூர் மக்கள் வெளியூர்களுக்கு செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். சாலையை சீரமைக்காததால் நேற்று 2 வது நாளாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் 20க்கும் மேற்பட்ட கிராம மக்களும், பள்ளி மாணவர்களும் சிரமம் அடைந்துள்ளனர்.

