நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழக்கரை: கீழக்கரையில் நியூ வே ஹோம் கேர் பள்ளி மற்றும் எக்ஸலண்ட் டியூஷன் சென்டரின் ஆண்டு விழா நடந்தது.
மழலையர் பள்ளி நிர்வாகி யாஸ்மின் பாத்திமா தலைமை வகித்தார். ஆப்ரின் ஸனோபர் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக கல்வியாளர் சாகிரா பானு பங்கேற்று போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். கலை நிகழ்ச்சிகள் நடந்தது. ஏராளமான ஆசிரியர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.