திருப்புல்லாணி: ராமநாதபுரம் அருகே ஆர்.எஸ்.மடை அமிர்தா வித்யாலயம் சி.பி.எஸ்.இ., பள்ளி ஆண்டு விழா நடந்தது. ராமநாதபுரம் ராஜா நாகேந்திர சேதுபதி தலைமை வகித்தார். தமிழ்நாடு மத்திய பல்கலை பேராசிரியர் கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். பள்ளி தாளாளர் லட்சுமி அம்மாள் வரவேற்றார். முதல்வர் கோகிலா ஆண்டறிக்கை வாசித்தார். துணை முதல்வர் பாலவேல் முருகன் உட்பட ஏராளமான ஆசிரியர்கள், பெற்றோர் கலந்து கொண்டனர்.
ஆசிரியர்களின் மனம் கவர்ந்த ஆசிரியர் பற்றிய நுால் வெளியிடப்பட்டது. பல துறைகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ், பதக்கம் வழங்கப்பட்டது. மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
தேவிபட்டினம்
நாரணமங்கலம் ஏ.பி.சி.எஸ்., கென்பிரிட்ஜ் பள்ளியின் 13 வது ஆண்டு விழா பள்ளி தாளாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. நிறுவனர் முருகநாதன், முதல்வர் நிக்கோலஸ் முன்னிலை வகித்தனர்.
விழாவில் சிறப்பு விருந்தினராக டி.ஆர்.ஓ., மாரிமுத்து கலந்து கொண்டு முதலிடம் பெற்ற பள்ளி மாணவர்களுக்கும், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், பரிசுகள் வழங்கி பேசினார். விழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. ஏற்பாடுகளை பள்ளியின் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

