நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிக்கல்: சிக்கல் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா விளையாட்டு விழா இலக்கிய மன்ற விழா உள்ளிட்ட விழா நடந்தது. தலைமையாசிரியர் ஏசுதாஸ் தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் சாந்தகுமார் வரவேற்றார்.
முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் அம்மாவாசி, சத்தியேந்திரன், ஆசிரியர் துரைப்பாண்டி, அரிகரன், வைகை பாசன சங்க மாநிலத் தலைவர் பாக்கியநாதன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் காதர் மைதீன், எஸ்.எம்.சி., குழு தலைவர் அன்னத்தாய் உட்பட பலர் பங்கேற்றனர்.
உதவித் தலைமை ஆசிரியர் நாத்தான் வேல் நன்றி கூறினார். பள்ளி மாணவ மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.